No results found

    11 கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்


    மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக் கானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தென் மாவட்டங்களில் முக்கிய மருத்துவமனையாக உள்ள இங்கு விபத்து, தீக்காய சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதன் காரணமாக அண்டை மாவட்டங்களான சிவகங்கை, தேனி, ராமநாதபு ரம், விருதுநகர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்வதுண்டு. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில ஆண்டுகளாக பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடங்கள் உரு வாக்கப்பட்டு சிகிச்சைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.

    அதன்படி மருத்துவ மனையை விரிவாக்கம் செய்யும் நோக்கில் தற்போது அரசு ஆஸ்பத்திரி வளா கத்தில் புதிய டவுன் பஸ் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தி ற்கு சுற்றுச்சுவர் அமைப்ப தற்கு வெளிப்புறமாக இருந்த 10 கடைகள் இடையூறாக இருந்தது. இதையடுத்து கடைகளை காலி செய்யுமாறு கடந்த 6 மாதத்திற்கு முன்பு மாநகராட்சி சார்பில் உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை கடைகளை காலி செய்யவில்லை. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் இன்று போலீசார் பாதுகாப்புடன் அரசு ஆஸ்பத்திரி முன்பு இடையூறாக இருந்த 11 கடைகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Previous Next

    نموذج الاتصال